தமிழகத்தில் பத்து ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை பிடித்துள்ள, தி.மு.க., எந்த சிக்கலும் இன்றி, முழுமையாக அதிகாரம் செலுத்த நினைத்தது. ஆனால், மத்தியில் பா.ஜ., ஆட்சி இருப்பதாலும், தமிழக கவர்னராக ரவி இருப்பதாலும், எதையும் எளிதாக செய்ய முடியவில்லை என்ற கோபம், தி.மு.க.,வுக்கு வந்துள்ளது.தமிழக அரசின் தலைவராக இருக்கும் கவர்னருக்கு தெரியாமல், எதையும் செய்ய முடியாது என்பதால், தி.மு.க., தவியாய் தவித்து வருகிறது. ‘நீட்’ தேர்வு ரத்து போன்ற சட்ட மசோதாக்கள், ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை என, தி.மு.க.,வுக்கு அரசியல் ரீதியாக பலன் தரக்கூடிய பல முக்கிய மசோதாக்கள், கோப்புகளுக்கு, கவர்னர் ஒப்புதல் அளிக்காமல், கிடப்பில் வைத்து விட்டார்.இது, தி.மு.க., அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.தங்களின் திட்டத்தை, கவர்னர் ரவி முறியடித்து விட்டார் என்ற கோபத்தில்தான், அவரை திரும்ப பெறக் கோரி, பார்லிமென்டில் தி.மு.க., – எம்.பி.,க்கள் குரல் எழுப்பத் துவங்கி உள்ளனர்.