சுவாமி தயானந்த கிருபா இல்லம் மனித குலத்துக்கு சிறப்பான சேவையை செய்து வருகிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி !

0
44

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சுவாமி தயானந்த க்ருபா ஹோம் என்பது உடல் ஊனமுற்றோருக்கான காப்பகம். குறிப்பாக ஆட்டிசம் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக. சிறப்புத் தேவையுடைய நபர்களுக்காக இந்த காப்பகம் செயல்பட்டு வருகிறது.

தோட்டக்கலை, விவசாயம் மற்றும் பால் பண்ணை ஆகியவற்றில் தொழில் பயிற்சி அளித்து பாதிக்கப்பட்டவர்களை சுயசார்புடையவர்களாக இந்கு மாற்றப்படுகிறார்கள். இங்கு தயாரிக்கப்படும் தூபக் குச்சிகள், வாழ்த்து அட்டைகள் போன்ற பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன.

ஜெயா மருத்துவமனையுடன் இணைந்து மருத்துவ சுகாதார வசதிகள் மற்றும் மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் நேற்று ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சுவாமி தயானந்த க்ருபா ஹோம் மேம்படுத்தப்பட்ட வசதிகள் திறப்பு விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

இதுதொதொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சுவாமி தயானந்த கிருபா இல்லத்தில் மன வள சவால்களை எதிர்கொள்ளும் மற்றும் ஆட்டிசம் குறைபாடுடைய பெரியவர்களுக்கு நீண்டகால தனி கவனிப்பை வழங்கி மனிதகுலத்துக்கு குறிப்பிடத்தக்க சேவையை ஆற்றி வருகிறது. ஆழமான சனாதன தர்மம் மற்றும் பாரதியத்தின் சிறப்பியல்புகளாகவும் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்யும் அமைப்புகள், சமுதாயத்தின் தாராளமான ஆதரவைப் பெறத் தகுதியானவை.” – சுவாமி தயானந்த கிருபா இல்லத்தில் ஆளுநர் ரவி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here