எல்லைக்குள் அத்துமீறிய பாக்., மீனவர் படகு பறிமுதல்

0
421

ஆமதாபாத்-குஜராத்தில், அரபிக்கடல் அருகே நம் எல்லைக்குள் இருக்கும் கழிமுகப் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாக்., மீனவர் படகை, ரோந்து பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில், அரபிக்கடல் அருகே ஹராமி நலா என்ற கழிமுகப்பகுதி அமைந்துள்ளது. இங்கு, மீன்கள் அதிகம் கிடைக்கும் என்பதால், பாகிஸ்தான் மீனவர்கள் அடிக்கடி அத்துமீறி நுழைவது வழக்கம். நேற்று முன்தினம், அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினர், இரு பாக்., படகுகளை பார்த்தனர். உடனடியாக, அவற்றை நோக்கி நம் வீரர்கள் முன்னேறினர். இதையறிந்த பாக்., மீனவர்கள், ஒரு படகில் மிக வேகமாக புறப்பட்டு, தங்கள் நாட்டின் எல்லைக்குள் சென்றனர்.பின், நம் எல்லையில் இருந்த பாக்., மீனவர்களின் மற்றொரு படகை, வீரர்கள் பறிமுதல் செய்தனர். அதில், மீன்பிடி வலைகள், உபகரணங்கள் மற்றும் மீன்கள் மட்டும் இருந்தன. சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் அந்த படகில் இல்லை என அதிகாரிகள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here