காஷ்மீரின் அவந்திபுரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் இன்று காலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.அவந்திபுராவின் டிரால் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.கொல்லப்பட்ட ஃசபீத் முஸ்தபர் ஃசபி மற்றும் உமர் தலி ஆகிய இரு பயங்கரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும், இருவரும் ஸ்ரீநகரில் கிராம பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில் தொடர்பு உடையவர்கள் எனவும் காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.