ஏப்ரல் 2 ஹிந்து புத்தாண்டு: அமெரிக்கா அறிவிப்பு

0
384

ஜார்ஜியா மாகாண கவர்னர் பிரையன் கெம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஜார்ஜியா மாகாணத்தில் இரண்டு லட்சம் ஹிந்துக்கள் வசிக்கின்றனர். இம்மாகாணத்தின் வளர்ச்சியில் ஹிந்துக்களின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கலாசாரம், பண்டிகைகள் முக்கியமானது. அதேபோல், ஹிந்துக்கள் வசந்த காலத்தை கொண்டாடுகின்றனர். எனவே, ஏப்., 2ம் தேதி ஹிந்துக்களின் புத்தாண்டு தினமாக அங்கீகரிக்கப்படுகிறது.இந்நிலையில், அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வட அமெரிக்காவில் வசிக்கும் பீஹார் மற்றும் ஜார்க்கண்ட் மக்களின் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த ஹோலி கொண்டாட்டத்தில், இந்திய தூதரக அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பீஹார் மற்றும் ஜார்க்கண்ட் முதல்வர்கள் இந்நிகழ்ச்சிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here