“ரஷிய எரிசக்தி மற்றும் பிற பொருட்களின் இறக்குமதியை இந்தியா துரிதப்படுத்த வேண்டும் அல்லது அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை, வெளிப்படையாக, அந்த முடிவுகள் தனிப்பட்ட நாடுகளால் எடுக்கப்படுகின்றன.
இந்தியா ரஷியாவிடமிருந்து ஒன்று முதல் இரண்டு சதவிகித எண்ணெயை மட்டுமே இறக்குமதி செய்கிறார்கள். இந்தியாவின் இறக்குமதியை பன்முகப்படுத்தவும் நம்பகமான சப்ளையராக பணியாற்றவும் இந்தியாவிற்கு ஆதரவளிக்கவும் அமெரிக்கா தயாராக இருக்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறோம்.
தொடர்புகொள்வதற்கும் ஈடுபடுவதற்கும் எங்களிடம் பல வழிகள் உள்ளன. வெளிப்படையாக, எங்கள் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகரை அனுப்புவது அதற்கு ஒரு எடுத்துக்காட்டு” என்று அவர் கூறினார்.