சூறையாடப்பட்ட பாரம்பரிய சின்னங்கள்

0
762

இறைவன் தான்  அவதரி ப்பதற்காக படைக்கப்பட்ட தேசம்தான் பாரதம். பாரத நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் புண்ணிய நதிகள் ஓடுவதுபோல நதிக்கரைகளில் திருக்கோவில்களும் வீற்றிருந்தன. எண்ணற்ற ரிஷிகளுக்கும் மகான்களுக்கும் இறைவன் காட்சி கொடுத்தான் .அந்த காட்சியை அவர்கள் தங்கள் பாடல்களில் வர்ணித்துள்ளனர். அந்த வர்ணனை அடிப்படையாகக் கொண்டு இறையருள் பெற்ற பல சிற்ப கலைஞர்கள் விக்கிரகங்களாக ஐம்பொன்னால் வார்த்து எடுத்துள்ளனர்.அந்தியரின் கைக்கு நாடு சென்ற போது அந்த விக்ரஹங்களை தங்கள் நாடுகளுக்கு கொள்ளையடித்து சென்றனர் .அதில் அதிகமாக பாரம்பரிய சிலைகளை கொள்ளையடித்தது இங்கிலாந்து தான். சுதந்திரத்திற்குப் பிறகு 70 ஆண்டுகள் ஆகியும் அவரகளது கைக்கூலிகள் சிலைகளை கடத்தி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். 2014க்கு பிறகு அந்த சிலைகளை மீட்கும் பணியில் நம் பாரத அரசு இறங்கியுள்ளது. இதுவரை ஆஸ்திரேலியா நாடு  29 சிலைகளையும் அமெரிக்கா 157 சிலைகளையும் பாரத அரசிடம் ஒப்படைத்து உள்ளன .நம் நாட்டில் இருந்து அதிகமான சிலைகளை கடத்தி சென்ற இங்கிலாந்து இன்னும் திருப்பிக் கொடுக்க மறுத்து வருகிறது .1700 ஆம்  வருடம் உலகம் முழுவதும் தங்க ஆபரணங்கள் சிலைகள் விற்பனை செய்து உலக அளவில் 24% ஜிடிபியில் பாரதம் இருந்தது .ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளில் ஜிடிபி பாரத மட்டுமே எட்டியது .பிரிட்டிஷார் நம்மை விட்டுப் போகும்போது ஜிடிபி 4% ஆகுது. இதற்கு காரணம் பிரிட்டிஷார் நம்மிடமிருந்து அடித்த கொள்ளை தான். நாகரீகமான நாடுகளுக்கு தேவையான எந்த பொருளாக இருந்தாலும், அழகு சாதனமாக இருந்தாலும் சரி, உபயோகப்பட கூடிய பொருளாக இருந்தாலும்சரி, ஐரோப்பாவின் மற்ற நாடுகளைவிட அதிக அளவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தாகத்தான் இருந்தது. தரத்திலும் நிறத்திலும் வடிவமைப்பிலும் அது உலோகமாக இருந்தாலும் சரி, இரும்பாக இருந்தாலும் சரி, வெள்ளியாக இருந்தாலும் சரி பொண்ணாக இருந்தாலும் சரி நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடியதாக இருந்தது. நமது   பாரதத்தின் சிறப்பு பொறியியல் வல்லுனர்களும், வியாபாரிகள், தொழிலதிபர்கள், பணம் முதலீட்டாளர்களும் அதிகமான நபர்களை தன்னகத்தே கொண்டிருந்தது பாரதம். வாணிகத்தின் மூலமாகவும் கப்பல்களிலும் அனைத்திலும் சிறந்து விளங்கியது. பிரிட்டிஷார் பாரதத்திற்கு வந்த பொழுது அவர்கள் கண்ட காட்சி இதுதான். தாமஸ்பிட்  என்பவர் சென்னையின் கவர்னராக இருந்தார். அவர் கோயில்களில் கொள்ளையடித்ததோ அல்லது ஏழை கலைஞரிடம் வாங்கி யதோ ஒரு வைரத்தை உலகிலேயே மிக மிக அழகான அந்த வைரத்தை 15 வருடத்திற்கு பிறகு ஒரு லட்சத்து 35 ஆயிரம் டாலருக்கு அதனை விற்றார். இந்த பணத்தை வைத்து அவரும் அவர் மகனும் பேரனும் கூட இங்கிலாந்து பிரதமராக போட்டியிட்டு வெற்றிபெற்று பதவியில் இருந்தார்கள். அந்த வைரம் தற்போது பிரான்சில் காட்சிப்பொருளாக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது .793 காரட் உள்ள ஒரே ஒரு வைரம் பட்டை தீட்டப்பட்டது உலகிலேயே மிகப்பெரிய வைரம் ஒரு சீக்கிய ரிடமிருந்து  வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டது .ஈரான் ஜெர்மனி ரஷ்யா அமெரிக்கா போன்ற நாடுகளில்அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள வைரங்கள் காக்கத்தியர் என்ற இந்து அரசிடமிருந்து இஸ்லாமியர்கள் பறித்து பிரிட்டிஷாரிடம்   விற்றார்கள். சுல்தான்கட்ச் என்ற புத்தர் சிலை பிரிட்டன் பிர்மிங்ஹாம் என்ற அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு தற்போது பிர்மிங்ஹாம்புத்தர் என்ற பெயரும் இடப்பட்டுள்ளது. சோழர் காலத்து வெண்கலச் சிலைகளும் ஓவியங்களும் இலக்கியங்களும் எண்ணற்றவை இந்த மண்ணிலேயே கொள்ளையடிக்கப்பட்டு இங்கிலாந்து நாட்டின் அருங்காட்சியத்தில் அலங்கரிக்கின்றன.இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் உள்ள அனைத்து சிலைகளும் இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்டு நிரப்பப்பட்டுள்ளன. இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரன் கூறுகையில் நீங்கள் உங்கள் நாட்டு பொக்கிஷங்களை இங்கிருந்து எடுத்துச் சென்றுவிட்டால் பிரிட்டிஷ் அருங்காட்சியகம் வெற்றிடம் ஆகிவிடும் என்று கூறியிருக்கிறார்.யுனெஸ்கோ அறிக்கைப்படி 1989 வரை 50 ஆயிரம் சிலைகள் இந்தியாவில் இந்த கடத்தப்பட்டுள்ளதாக கூறியது .ஒவ்வொரு  10ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கடத்தப்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது. இது தவிர ஆவணப் படுத்தப் படாத பல சிலைகள் கடத்தப்பட்டு வருகிறது .இது வரை உள்ள ஏழு மில்லியன் சிலைகளில் 1.3 மில்லியன் மட்டுமே ஆவணப்படுத்தப்பட்டது. இந்தியாவின் தொல்லியல்துறை இதுவரை காணாமல் போன ,கடத்தப்பட்ட சிலைகளின் விவரங்களை அறிய சர்வதேச போலீசாரிடம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை .சிலை கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு .மிகப்பெரிய குற்றவாளி இன்னும் சட்டத்தில் பிடியில் சிக்கவே இல்லை. சமீபத்தில் கைது செய்யப்பட்ட சுபாஷ் கபூர் இந்தியரால் கைது செய்யப்படவில்லை.

அமெரிக்கா போலீஸ்தான் கைது செய்துள்ளது. அவரிடம் 2622 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன அதன் மதிப்பு 107.6 மில்லியன் டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்ட பிறகும் கூட சரியான ஆவணங்கள் இல்லை என்பதால் அதனை திரும்பப் பெறும் உரிமையும் இல்லாமல் உள்ளது .இப்படி பெரிய அளவில் பறிமுதல் செய்தது இந்தியாவில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. சிலை தடுப்புப் பிரிவு தமிழ்நாட்டில் செயல்படுவது போல இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படவில்லை.  விக்ரகங்கள் கடத்தல் மூலம் கலாச்சார அழிப்பு என்பது சிலைகள் இழப்பு மட்டுமல்ல கலாச்சார அடையாளங்களை இழப்பதும் ஆகும்.கலாச்சார இழப்பு சமுதாய சீர்கேட்டிற்கு வழி வகுக்கும் .அதற்கு எடுத்துக்காட்டாக இருப்பது இன்றைய ஆப்கானிஸ்தான்,மற்றும் பாகிஸ்தான்

ஆகவே  வரலாறு, பாரம்பரியம் என்பது அந்த அந்த நாட்டின் புவியியலையும் சேர்ந்தது என்பதால் கலாசாரத்தை பாதுகாப்பது நல்ல குடிமகனின் கடமை.

 

                                                                       -சந்திரசேகர்ஜி
                                                                balasekaran66@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here