ஐரோப்பிய நாடான பிரான்சில், அதிபர் தேர்தல் வரும் 10 மற்றும் 24ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது.இந்த தேர்தலில், தற்போதைய அதிபர் இமானுவேல் மேக்ரோன், மரைன் லீ பென் உட்பட 12 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், மரைன் லீ பென் கூறியதாவது:நான் அதிபரானால், பிரான்சில் பொது இடங்களில் பெண்கள் ‘ஹிஜாப்’ அணிந்து செல்ல தடை விதிப்பேன்.
சீட் பெல்ட் அணி யாமல் காரை ஓட்டிச் செல்வோருக்கு அபராதம் விதிப்பது போல், பொது இடங்களில் ஹிஜாப் அணிந்து செல்வோருக்கு அபராதம் விதிக்கப்படும். இதை போலீசார் சிறப்பாக அமல்படுத்துவர் என்ற நம்பிக்கை உள்ளது.பொது அமைதி, சமத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கில் தான். ஹிஜாப் அணிய தடை விதிப்பேன் என கூறுகிறேன். இதில், தனி மனித உரிமைக்கு பாதிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.இவ்வாறு அவர் கூறினார்.