ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

0
233

‘ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்’ என ஆனைவராலும் அறியப்படும் கதாதர் 1836 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள், வங்காள மாநிலத்தில் ஹூக்லி மாவட்டதிலுள்ள “காமர்புகூர்” என்ற இடத்தில் பிறந்தார்.

கல்கத்தா தட்சினேஸ்வர் காளி கோயிலில் தினந்தோறும் பூஜை செய்துவந்த ராமகிருஷ்ணருக்கு, அவ்வப்போது சந்தேகங்கள் எழுவதுண்டு.

‘தாம் கல்லைத்தான் பூஜை செய்கிறோமா கடவுளா? என்று நினைத்த அவர், ‘காளி உண்மையிலேயே கடவுளாக இருந்தால், தனக்குக் காட்சி அளிக்குமாறு தினமும் பிரார்த்தனைகளையும், தியானமும் செய்தார்.

தன்னுடைய முயற்சிக்கு பலனில்லை என்பதை உணர்ந்தவர், காளி சிலையின் கையில் இருந்த வாளினை எடுத்து தன்னைத்தானே கொல்ல முயற்சித்தார். அத்தருணத்தில், தன்னுடைய சுயநினைவை இழந்ததாகவும், ஒரு பேரானந்த ஒளி அவரை ஆட்கொண்டதாகவும், பின்னாளில் அவர் குறிப்பிட்டார்.

மனித இனம் முழுமைக்கும் ஒரு ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் வேதாந்த உண்மைகளைக் கண்டறிந்தவர் மட்டுமல்ல, பிறருக்கு அதை உணர்த்துவதிலும் வல்லமைப் படைத்தவராக விளங்கினார். பாமரர் முதல் பண்டிதர் வரை அனைவரின் மனத்திலும் ஆன்மீக விளக்கெரிய தூண்டுதலாக அமைந்தார்.

இவரின் ஆன்மீகச் சிந்தனை உலகெங்கும் பரவி, அவதாரப் புருஷர் என்று அனைவராலும் போற்றப்பட்டார். மேலும், பலர் நாடி வந்து சீடர்களானார்கள். இவர்களுள் நரேந்தரநாத் தத்தா எனப்பட்ட சுவாமி விவேகானந்தர் குறிப்பிடத்தக்கவர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் இறப்புக்குப் பிறகு, சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட ராமகிருஷ்ண மடம், இன்றளவும் ஆன்மீக வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது.

இவர் தனது இறுதி நாட்களில் தொண்டை புற்றுநோயால் அவதியுற்றார்.

1886 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ம் நாள் அவர் உடலை விட்டு, உயிர் பிரிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here