நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் பிரதமர் இம்ரான்கான் நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.நாட்டு மக்கள் இன்று (சனிக்கிழமை) வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், தனது அரசை கவிழ்க்க அமெரிக்கா முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது இம்ரான்கான் இந்தியவை புகழ்ந்து பேசியுள்ளார். இம்ரான்கான் பேசுகையில், இந்தியர்கள் மிகவும் சுயமரியாதை கொண்டவர்கள். எந்த ஒரு வல்லரசு நாடும் இந்தியாவுக்கு கட்டளையிட முடியாது. ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்கள் மற்றும் காஷ்மீருக்கு என்ன நடத்தப்பட்டது ஆகியவற்றால் நான் ஏமாற்றமடைந்தேன். இதனால், இந்தியாவுடன் நாம் நட்புறவு மேற்கொள்ளவில்லை’ என்றார்.