நீண்ட தூரம் சென்று எதிரி ஏவுகணையை விண்ணிலேயே இடை மறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட, ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ. எனப்படும்,பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஏவுகணை, ஒடிசா சந்திப்பூர் ஒருங்கிணைந்த ஆய்வு மையத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பாராட்டு தெரிவித்தார்.