ராமபிரான் அவதரித்த தினமான ராமநவமி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் “நாட்டு மக்களுக்கு ராம நவமி நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் இறைவன் ஸ்ரீ ராமரின் அருளால் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளம் கிடைக்கட்டும். ஜெய் ஸ்ரீ ராம்!” இவ்வாறு தெரிவித்துள்ளார்