இந்திய காற்றாலைகள் டர்பைன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் துள்சி தந்தி, செயலர் கிரி ஆகியோர் கூறியது காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னணியில் உள்ளது. காற்றாலைகள் டர்பைன் உற்பத்தியாளர்கள் சங்கம், மத்திய புதுப்பிக்கத்தக்க மின் துறை ஆதரவுடன், டில்லியில் இம்மாதம் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை, ‘விண்டெர்ஜி’ என்ற காற்றாலை மின்சாரம் தொடர்பான சர்வதேச மாநாடு நடத்துகிறது.இதன் வாயிலாக காற்றாலை துறையில் உலக முதலீட்டை இந்தியா பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.தேசிய காற்று சக்தி நிறுவன இயக்குனர் பலராமன் கண்ணன் தமிழகம், குஜராத்தில் கடலில் காற்றாலை மின் நிலையம் அமைக்க சாதகமான சூழல் நிலவுகிறது.மத்திய மின் துறை, இரு மாநிலங்களில் உள்ள கடலில், 2030க்குள் 30 ஆயிரம் மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.தனுஷ்கோடியில், 350 கோடி ரூபாயில் ஆய்வு அமையம் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்திற்கு, 75 ஏக்கர் நிலம் கிடைத்துள்ளது. அங்குள்ள கடலில் தலா, 8 மெகா வாட் திறனில் இரு காற்றாலைகள் நிறுவி பரிசோதிக்கப்படும். உற்பத்தியாகும் மின்சாரத்தை விற்பதற்காக, தமிழக அரசுடன் பேச்சு நடந்து வருகிறது.