மத மாற்றத்திற்கு வற்புறுத்தும் ஆசிரியை; மாணவிகள் புகார்

0
249

கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் தனது ஆசிரியை மதமாற்றத்தில் ஈடுபடுவதாக போலீசில் குற்றம்சாட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பள்ளியில் தையல் கலை ஆசிரியை பியாட்ரீஸ் தங்கம், தையல் வகுப்புக்கு வரும் ஹிந்து மத மாணவிகளிடம் ஹிந்து மத கடவுள்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும், கிறிஸ்தவ மத பிரார்த்தனைகளை சொல்லி பிரார்த்தனை செய்ய வற்புறுத்துவதாகவும் அம்மாணவி கூறினார் . இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இது தொடர்பாக விசாரணை நடத்தி ஆசிரியை பியாட்ரீஸ் தங்கம் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் எம்பெருமாள் நேரில் விசாரணை நடத்தினார். முடிவில், ஆசிரியை பியாட்ரீஸ் தங்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here