டில்லியில் மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி, மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியது தேசிய கிராம சுயராஜ்ய திட்டத்தை, 2026 வரை தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது.மேம்பட்ட வாழ்வாதாரத்துடன், சுகாதாரமான, குழந்தைகளுக்கு ஏற்ற சூழ்நிலை அடங்கிய கிராமங்களை உருவாக்க, இத்திட்டம் வழி செய்கிறது. கிராமங்களில் குடிநீர் வசதி, பசுமை, தன்னிறைவான உள்கட்டமைப்பு, சமூக பாதுகாப்பு, வளர்ச்சி, நல்லாட்சி ஆகியவற்றை ஏற்படுத்தவும் இத்திட்டம் உதவும். இத்திட்டத்தின் மொத்த நிதிச் செலவு 5,911 கோடி ரூபாய். இதில் மத்திய அரசின் பங்கு 3,700 கோடி ரூபாய்; மாநில அரசுகளின் பங்கு 2,211 கோடி ரூபாய். நாடு முழுதும், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 60 லட்சம் பிரதிநிதிகள், செயல்பாட்டாளர்கள் மற்றும் இதர பங்குதாரர்கள், இத்திட்டத்தின் நேரடிப் பயனாளராக இருப்பர். என கூறினார்.