அமெரிக்க ஜனாதிபதி பைடன் மகாவீர் ஜெயந்தி வாழ்த்து

0
181

 
அமெரிக்க ஜனாதிபதி பைடன் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஜெயின் சமூகத்தினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். ஜெயின் மத நம்பிக்கைகளை கடைப்பிடிக்கும் மக்களுக்கு மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நானும், ஜில்லும் (பைடனின் மனைவி) வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.நாம் அனைவரும் உண்மையை தேடியும், வன்முறையில் இருந்து விலகியும், ஒருவருக்கொருவர் நல்லிணக்கத்துடன் வாழும் மகாவீர் சுவாமி காட்டிய வழிமுறையை பின்பற்றுவோம் என்று தெரிவித்து உள்ளார்.ஜெயின் மதத்தில் கடைசி தீர்த்தங்கரராக உள்ள கடவுள் மகாவீரர் பிறந்த தினம் மகாவீர் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அவர்களது முக்கிய மத திருவிழாவான இந்த தினத்தில் ஜெயினர்கள் வழிபாட்டில் ஈடுபடுவது மற்றும் விரதம் இருப்பது ஆகியவற்றை கடைப்பிடிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here