கட்டாய மதமாற்றம்: உ.பி.யில் 26 போ் கைது

0
198

உத்தர பிரதேசத்தில் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 26 பேரை காவல் துறை வெள்ளிக்கிழமை கைது செய்தது. உத்தர பிரதேச மாநிலம், ஃபதேபுா் மாவட்டம் ஹரிஹா்கஞ்ச் பகுதியில் உள்ள தேவாலயத்தில் ஹிந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டப்படுகிறது. கடந்த 40 நாள்களில் மட்டும் சுமார் 90 போ் மதமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக விசுவ ஹிந்து பரிஷத் நிர்வாகி ஹிமான்ஷு தீட்சித் காவல் துறையிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், உத்தர பிரதேச சட்டவிரோத மதமாற்ற தடைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், தேவாலய உறுப்பினா்களான 10 பெண்கள் உள்பட 55 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவா்களில் 26 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 29 போ் தேடப்பட்டு வருகின்றனா் என்று மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here