‘‘காவியை அவமதித்தால் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்’’ என்று தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) பிரதான நுழைவாயில் அருகே ஹிந்து சேனை அமைப்பு சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது. அண்மையில், ராம நவமி பண்டிகையின்போது ஜேஎன்யூ விடுதி உணவகத்தில் அசைவ உணவு பரிமாறப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு மாணவா் குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டது.உணவகத்தில் அசைவ உணவு சாப்பிடுவதை அகில பாரதிய வித்யா்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பைச் சோ்ந்த மாணவா்கள் தடுத்ததால் மோதல் ஏற்பட்டது என்று பல்கலைக்கழக மாணவா்கள் சங்கம் தெரிவித்தது. அதனை மறுத்த ஏபிவிபி மாணவா்கள், விடுதியில் நடைபெற்ற பூஜையை இடதுசாரி மாணவா்கள் தடுத்ததால் மோதல் ஏற்பட்டது என்று தெரிவித்தனா். ஜேஎன்யூ பிரதான நுழைவாயில் அருகிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காவிக் கொடிகளை ஏற்றி, ‘‘காவியை அவமதித்தால் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்’’ அகில பாரதிய வித்யா்த்தி பரிஷத் .
Home Breaking News ‘‘காவியை அவமதித்தால் கடுமையான பின்விளைவுகள்’’: ஜேஎன்யூ மாணவா்களுக்கு அகில பாரதிய வித்யா்த்தி பரிஷத் எச்சரிக்கை