பழனி சுப்பிரமணியபிள்ளை

0
118

தமிழ்நாட்டில் ஏப்ரல் 20, 1908 ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை முத்தையா பிள்ளையும் ஒரு மிருதங்க இசைக் கலைஞர் என்பதால் அவரிடமிருந்து இசை கற்கத் தொடங்கினார். தென்னிந்தியாவைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவர் கஞ்சிரா வாசிப்பதிலும் வல்லவராகத் திகழ்ந்தவர்.புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளையிடம் மாணவராக மிருதங்கம் கற்றார். தனக்கு 20 வயது ஆவதற்கு முன்பே புகழ்வாய்ந்த பாடகர்களான காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளை, மழவரயேந்தல் சுப்பராம பாகவதர் மற்றும் முடிகொண்டான் வேங்கடராம ஐயர் ஆகியோருக்கு பக்கவாத்தியமாக மிருதங்கம் வாசித்தார். கச்சேரி மேடையில் நாயகமாக ‘வாய்ப்பாட்டுக்காரர்’ இருக்க, அவரின் இடது பக்கத்தில் வயலின்; வலது பக்கத்தில் மிருதங்கம்… இதுவே நடைமுறை. வயலின் இசைக் கலைஞர் அமரும் இடத்தில் பழனி சுப்ரமணிய பிள்ளை அமர்ந்தால்தான் இடது கையால் சபை நோக்கியபடி வாசிக்க முடியும். ஆனால், எதிர்பக்கம் அமர்ந்து வாசிக்க புகழ்வாய்ந்த வயலின் இசைக் கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேடை நடைமுறையில் ஏற்பட்ட பிணக்கை தீர்த்து வைத்து இவருக்கு தொடர்ந்து தனது கச்சேரிகளில் வாய்ப்பளித்தார், செம்பை வைத்தியநாத பாகவதர். திறமைக்கு முன்னால் நடைமுறைச் சிக்கல்கள் தொலைந்து போயின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here