ஸ்ரீ கள்ளழகர் வைகைக்கு வருகிறார் : மண்டூக மகரிஷிக்கு மோட்சம்

0
240

மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்க ஸ்ரீ கள்ளழகர் வைகைக்கு வருகிறார் என்பது மட்டும் தான் உண்மையான காரணம்.மண்டூகம் என்றால் தவளை. உலகத்தில் இன்று சுமார் 5000  தவளை இனங்கள் உள்ளது . இந்தியாவில் தவளை 380 இனங்கள் உள்ளது .மதுரை பகுதிகளில் பொதுவாக ஆசியத் தேரை (Duttaphrynus melanostictus) அல்லது (Common Asian Toad) என்ற வகையும் , வண்ணத் தவளை (Uperodon taprobanicus, Sri Lankan bullfrog ) என்ற தவளையும் காணப்படுகிறது .வைகை , தாமிரபரணி , காவேரி உற்பத்தி ஆகும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இன்றும் புதிய தவளை இனங்கள் கண்டுபிடிக்கப்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது .வயல் சார்ந்த மருத நிலத்தில் தவளை இனத்திற்கு முக்கிய பங்கு உள்ளது . தலைப்பிரட்டை எனும் தவளைகளின் முதல் கட்டமும் , தவளைகளும் மருத நிலத்தின் சூழலில் முக்கிய பங்கு .மதுரை என்னும் மதுர நிலத்தில் காணப்படும் தவளை இனங்கள் பற்றிய ஒரு நெடிய ஆராய்ச்சி தேவை .அழகர் வழிபாடு முல்லை மற்றும் மருத நிலம் சார்ந்த வாழ்வியல் வழிபாடு .

– ராமகிருஷ்ணன்.இ

-சுற்றுப்புற சூழல் பொறியாளர் ஸ்ரீ பூ .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here