உலக பாரம்பரிய நாள்

0
183

ஒவ்வொரு நாட்டின், பழங்கால கலாசார பாரம்பரியம், கலை, நாகரிக பண்பாட்டு முறைகளை, தொல்லியல் சின்னங்களே, அடுத்தடுத்த தலைமுறை மக்களுக்கு உணர்த்துகின்றன.இத்தகைய நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஏப்., 18ம் தேதி, உலக பாரம்பரிய நாள்; நவ., 19 – 25ல், உலக பாரம்பரிய வாரம் என கடைப்பிடிக்கப்படுகிறது.உலக பாரம்பரிய நாளான இன்று, தொல்லியல் துறையினர், விழா கொண்டாடுகின்றனர். மாமல்லபுரம் கடற்கரை கோவில் பகுதியில், காலை 9:30 மணிக்கு, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், புகைப்பட கண்காட்சியை துவக்கி, மாமல்லபுரம் சிற்பங்கள் குறித்து நுாலை வெளியிடுகிறார்.மாலை 5:30 மணிக்கு, கலாஷேத்ரா குழுவினரின் கலாசார கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது. துறை கண்காணிப்பாளர் காளிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இன்று மட்டும், சிற்பங்களை இலவசமாக காண அனுமதிப்பதாக, துறையினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here