மற்றொரு மைல்கல் சாதனை

0
335

ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களில், ஏப்ரல் 16ம் தேதி ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான தொலை மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுள்ளன. இதுதான் இதுவரை வழங்கப்பட்ட ஆலோசனைகளில் மிக அதிகபட்சமானதாகும். இதில் முந்தைய சாதனை ஒரே நாளில் 1.8 லட்சம் ஆலோசனைகள் பெறப்பட்டதுதான். ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள் நான்காவது ஆண்டைக் கொண்டாடும் வேளையில், இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இ சஞ்சீவனி தளத்தின் மூலம் தொலைமருத்துவ ஆலோசனைகள் பெறப்படுகின்றன. ஏழை எளிய மக்களும் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர். மிகப்பெரிய நாடான பாரதத்தில் தொலைதூர கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும், ஏழைகளுக்கும் இந்த மருத்துவ ஆலோசனை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here