பிற்படுத்தப்பட்டோரின் மனநிலை மாற வேண்டும்: மோகன் பாகவத்

0
224

கான்பூர்,-”பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுக்காக சட்டங்கள் இயற்றினால் மட்டும் போதாது; அவர்களது மனநிலை மாற வேண்டும்,” என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தினார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் இரண்டு நாள் பயணமாக உத்தர பிரதேசம் வந்துள்ளார். கான்பூரில் நேற்று நடந்த வால்மீகி ஜெயந்தி விழாவில் அவர் பேசியதாவது:

பகவான் வால்மீகி எழுதியதால் தான், ராமர் குறித்து நமக்கு தெரியவந்தது. ஹிந்துக்களுக்கு ராமரை அறிமுகம் செய்தவர் வால்மீகி.

வால்மீகி சமூகத்தினர் தற்போதும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். அவர்கள் முன்னேற வேண்டும்.

மக்களின் நலனுக்காக பல நல்ல திட்டங்களை, சட்டங்களை அரசு உருவாக்குகிறது. அது தனக்கானது என்று உணர்ந்து மக்கள் ஏற்றால் மட்டுமே, அதன் பலனை பெற முடியும். ‘பிற்படுத்தப்பட்டோருக்காக சட்டங்கள் உருவாக்கியுள்ளோம். ஆனால், அதை ஏற்கும் மாற்றம் மக்களிடையே தேவை’ என்று அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்.

அதனால், வெறும் சட்டங்கள் மட்டும் இயற்றினால் போதாது. அது தங்களுக்கானது என்று மக்கள் உணரும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here