பிரிட்டன் பிரதமர் போரிஸ் இந்தியா வந்தார்

0
184

அரசு முறை பயணமாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று ( 21ம் தேதி) இந்தியா வந்தார். முதல் நாள் பயணமாக குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.காந்தி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட்ட அவர், ராட்டினத்தில் நூல் நூற்றினார். தொடர்ந்து தொழில் தொடர்பான ஆலோசனை, பிரதமர் மோடியுடன் சந்திப்பு என பல்வேறு நிகழ்வுகள், போரிஸ் பயணதிட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளன.குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் வந்திறங்கிய அவருக்கு உயர் அதிகாரிகள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.இருநாட்டு வர்த்தக ஒப்பந்தம், பாதுகாப்பு, மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து முக்கிய பேச்சு நடக்கிறது. இரு நாட்டு உறவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்கள் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.உக்ரைன், ரஷ்ய போர் நடந்து வரும் வேளையில் இந்த சந்திப்பு உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here