ஐரோப்பிய நாடான பிரிட்டன், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியுள்ளது. இதையடுத்து, பல்வேறு நாடுகளுடன் தொழில் மற்றும் வர்த்தக ரீதியிலான நேரடி உறவுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது. இதில் இந்தியாவுடனான உறவுக்கு பிரிட்டன்அரசு தீவிரம் காட்டிவருகிறது.இந்தியா, பிரிட்டன் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்ய, ஏற்கனவே பேச்சு நடந்து வருகிறது.நேற்று குஜராத் வந்த போரிஸ் ஜான்சன் கூறியது: தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் மென்பொருள் உட்பட பல துறைகளில் நம் நாட்டில் ஆயிரக்கணக்கான நிபுணர்கள், பணியாளர்களுக்கு தேவை உள்ளது. இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இந்தியர்களுக்கு அதிக அளவில் பணி விசா வழங்கதயாராக உள்ளோம்.இந்தியாவுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்வதில் மிகவும் ஆர்வமுடன் உள்ளோம்.இதற்கு எந்தக் காலக் கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை. அதே நேரத்தில் அவசரப்பட மாட்டோம். இந்தாண்டுக்குள் இதில் ஒப்பந்தம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது