தமிழர்கள் மொழி அடையாளமிக்கவர்கள். மொழிக்காக முதலில் வருபவர்கள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறியுள்ளார்.சென்னை உயர்நீதிமன்றத்தில் 9 நிர்வாக கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா சென்னை வழக்கறிஞர்கள் நீதித்துறையை வலுப்படுததும் பணிகளில் முக்கிய பங்காற்றுகின்றனர். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும் நீதித்துறை கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவது அவசியம். மக்களின் தேவையை நீதித்துறை பூர்த்தி செய்யும்.உள்ளூர் மொழிகளை பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி மாநில மொழிகளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும். ஒருவர் நீதிபதியாக மொழி, இனம், மதம் ஆகியவை தடையாக இருக்கக்கூடாது. வழக்கு விசாரணை என்பது வழக்காடிகள் புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைப்பது குறித்து சகநீதிபதிகளுடன் ஆலோசனை செய்யப்படும். கலந்து ஆலோசித்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக வழக்குகளை விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.’ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்தேர்ந்துசெய் வஃதே முறை’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.