மங்களூரில், மசூதியின் அடிப்பகுதியில் ஹிந்து கோவில் கட்டுமானங்கள் இருப்பது தெரிய வந்துள்ளதால், அந்த நிலம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி துவங்கி உள்ளது.சீரமைக்கும் பணிகர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மங்களூரின் புறநகர் பகுதியான மலாலியில் உள்ள ஒரு மசூதியை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மசூதியின் அடிப்பகுதி மண் அகற்றப்பட்டபோது, அங்கு கோவில் கட்டுமானங்கள் இருப்பது, தெரிய வந்தது.இதையடுத்து, ‘நிலம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்யும் வரை, மசூதி சீரமைப்பு பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்’ என, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, மசூதி பணிகளை உடனடியாக நிறுத்தி வைக்க, மாவட்ட நிர்வாகம் நேற்று உத்தரவிட்டது.இதுகுறித்து, மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது: சீரமைப்பு பணி நடைபெறும் மசூதியின் அடிப்பகுதியில், கோவில் கட்டுமானங்கள் இருப்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. இதனால், அங்கு நடைபெறும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.