ராணுவ செலவினம்: 3வது இடத்தில் இந்தியா

0
202

ஸ்வீடன் நாட்டில் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு மையம் (எஸ்ஐபிஆர்ஐ) உலக நாடுகள் ராணுவத்துக்கான செலவினங்கள் குறித்து ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், கடந்த 2021ம் ஆண்டு நிலவரப்படி உலகின் ராணுவச் செலவுகள் 2.1 ட்ரில்லியன் டாலர் அளவை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இது, அதற்கு முந்தைய ஆண்டை விட 0.7 சதவீதம் அதிகமாகும். உலக நாடுகளில் ராணுவத்திற்கு செலவினங்களை மேற்கொள்வதில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. 4வது, 5வது இடங்கள் முறையே பிரிட்டன், ரஷ்யா நாடுகள் உள்ளன.உலக நாடுகளின் மொத்த செலவினங்களில் இந்த 5 நாடுகள் மட்டும் 62 சதவீத செலவினங்களை மேற்கொள்கிறது. கோவிட் பரவலினால் உலக பொருளாதாரம் பெருமளவு பாதித்த நிலையிலும், உலக நாடுகள் ராணுவத்திற்கான செலவு அதிகரித்துள்ளதாக ஆய்வு மையத்தின் இயக்குனர் டாக்டர் டியாகோ தெரிவித்துள்ளார். 2020ல் ராணுவத்துக்கான செலவு உலக ஜிடிபியில் 2.2 சதவீதமாக இருந்த நிலையில், 2021ல் ராணுவத்துக்கான செலவு உலக ஜிடிபியில் 2.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here