6 முதல் 12 வயதுடைய குழந்தைகளுக்கு, பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசி போட மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 முதல் 12 வயது குழந்தைகளுக்கு கார்பிவாக்ஸ் தடுப்பூசியும், 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு ஜைக்கோவ்-டி தடுப்பூசியும் செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளன.சி.டி.எஸ்.சி.ஓ., எனப்படும், மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் சமர்ப்பித்து, ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் கடந்த ஆண்டு விண்ணப்பித்தது. இந்நிலையில், 6 முதல் 12 வயதுடைய குழந்தைகளுக்கு அவசர காலத்தில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.