தர்மத்தையும் சட்ட ஒழுங்கையும் காப்பது ஓர் அரசின் அடிப்படைக் கடமையாகும். அரசு என்பது தர்மத்தை மட்டுமே விதிகளாகக் கொண்டிருக்க முடியும். எனவே, அரசானது தர்மம் இல்லாமல் இருக்கமுடியாது அல்லது தர்மத்தைக் கடைப்பிடிக்காமல் இருக்க முடியாது. தர்மம் என்பது இல்லாவிட்டால், அது ஒரு சட்டவிரோத அரசாகவே இருக்கும். சட்ட விரோதம் இருக்கும் இடத்தில், அரசு இருப்பு பற்றிய கேள்வியே எழும். தர்மத்தின் படி செயல்படாத அந்த அரசு இருந்தாலும் ஒன்று தான், இல்லாததும் ஒன்றுதான்…”
– பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா