பயங்கரவாத செயல்களில் இருந்து விலகி பொதுமக்களுக்கு உரிய நல்ல ஆட்சியை வழங்குவோம் என தலீபான்கள் கூறினர். ஆனால், தலீபான்களுக்கு அஞ்சி அந்நாட்டு மக்களில் பலர் அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்தனர். அதிபராக இருந்த அஷ்ரப் கனியும் நாட்டை விட்டு வெளியேறினார்.இந்த நிலையில், தலீபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதன்படி, சமீபத்தில் ஹெராத் மாகாணத்தில் உள்ள சலூன் கடைகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பும் இதேபோன்ற கடுமையான கட்டுப்பாடுகளை அந்நாட்டு மக்கள் எதிர்கொண்டனர். அரசு பணியிலுள்ள ஆடவர்கள் பணியாற்றும்போது முழு அளவில் வளர்ந்த தாடி வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் பணிநீக்கம் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டு இருந்தனர்., திருமண நிகழ்ச்சிகளில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை செய்யப்பட்டு இருந்தது. ஆடவர் மற்றும் மகளிர் தனித்தனி அறைகளில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டும் என்றும் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது என கடந்த அக்டோபரில் ஸ்புட்னிக்குக்கு அளித்த பேட்டியில் ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கூறினார்.