ராஜா ரவிவர்மா பிறந்த தினம் இன்று

0
460

காலத்தால் அழியாப் புகழுடைய ஏராளமான ஓவியங்களைப் படைத்த பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மா (Raja Ravi Varma) பிறந்த தினம் இன்று ஏப்ரல் 29.

கேரள மாநிலம் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூரில் (1848) பிறந்தவர்.

1870 முதல் 1880 வரை காலத்தால் அழியாப் புகழ்கொண்ட ஏராளமான ஓவியங்களைப் படைத்தார். அன்னப்பட்சியுடன் உரையாடும் தமயந்தி, யசோதா கிருஷ்ணன் ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றவை.

l அவர் சிருஷ்டித்த ஓவியங்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்தியாவில் மட்டுமல்லாது, சர்வதேச ஓவியக் கண்காட்சிகளிலும் பல பரிசுகள், பதக்கங்களைப் பெற்றார்.

தன் உருவத்தை மிகச் சிறப்பாக வரைந்ததற்காக திருவாங்கூர் மகாராஜா இவருக்கு ‘வீரஸ்ருங்கலா’ என்ற விருது வழங்கிச் சிறப்பித்தார். 1904-ல் ‘கெய்ஸர்-இ-ஹிந்த்’ என்ற பதக்கத்தை ஆங்கிலேய அரசு வழங்கியது.

அவரது அசல் ஓவியங்கள் தங்கள் வீடுகளை அலங்கரிப்பதை உயர்ந்த அந்தஸ்தின் அடையாளமாக மக்கள் கருதினர்.

ஆரம்பத்தில் மலையாளம், சமஸ்கிருதம் மட்டுமே அறிந்திருந்த இவர் பிறகு இந்தி, குஜராத்தி, ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றார்.

l இவரது யசோதா கிருஷ்ணன் ஓவியம் 2002-ல் ரூ.56 லட்சத்துக்கு ஏலம் போனது. இவரது ஓவியங்களுக்குப் பெரும் வரவேற்பும் மதிப்பும் இருந்ததால் பரோடாவின் திவான் மாதவ் ராவ் யோசனையின் பேரில் லித்தோகிராஃப் அச்சகம் உருவானது. இதன்மூலம் அச்சடிக்கப்பட்ட இவரது ஓவியப் பிரதிகள் உலகம் முழுவதும் சென்றடைந்தன. வசதி குறைந்தவர்கள்கூட இவரது ஓவியப் பிரதிகளை வாங்க முடிந்தது.

l காலண்டர் படங்கள் என்னும் ஓவியத் துறை இந்தியாவில் தோன்ற மூலகாரணமாக இருந்தவர் ரவிவர்மா. உயிரோட்டம் நிறைந்த ஓவியங்களை வரைந்து, இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் பரவச்செய்த ஓவிய மேதை ராஜா ரவிவர்மா 58 வயதில் (1906) மறைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here