பிரதமர் குறித்து விமர்சனம்: மேடையில் இருந்து இறக்கி விட்ட பொதுமக்கள்!

0
247

கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக திருமாவளவன் கலந்து கொண்டார். இதையடுத்து, பேசிய திருமாவளவன் வழக்கம் போல பாரதப் பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார். இதுதவிர, அவரை ஒரு வில்லன் என்று கூறியிருந்தார். வி.சி.க தலைவரின் இந்த கருத்து மேடையில் இருந்த பலருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து, திருமாவின் பேச்சை உடனே நிறுத்த வேண்டும் என பலர் கோஷம் எழுப்பியுள்ளனர். இதற்கு, மேலும் திருமாவை பேச அனுமதித்தால் நம்ம நிலைமை அதோ கதி என்று அஞ்சிய விழா ஏற்பாட்டாளர்கள், திருமாவை பாதுகாப்பாக மேடையில் இருந்து வேக வேகமாக கீழே இறக்க முயன்றுள்ளனர். இதனிடையே, மேடையில் இருந்த பட்டபத் ஸ்ரீனிவாசன் என்பவர் பிரதமர் மோடி வில்லன் இல்லை… அவர் இந்திய நாட்டின் ஹீரோ என்று திருமாவை நோஸ் கட் செய்த சம்பவம் தான் ஹைலட் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here