பாரதநாட்டில் நமது தர்மமானது தாழ்ந்தநிலைக்கு சென்ற சமயத்தில் உயர்ந்தநிலைக்கு கொண்டு வருவதற்கு சமுதாயத்தை வழிநடத்தவந்த ஹிந்துசிந்தனையை, உயர்ந்ததத்துவங்களை மீண்டும் புத்தெழுச்சிபெறுவதற்கு அவதரித்த மூவரில் ஒருவரானவர் ஸ்ரீமத்பகவத் ராமானுஜர் ஆவார். கலியுகம் 4118 (கிபி 1017) சித்திரைமாதம் சுக்லபக்ஷ பஞ்சமி வியாழக்கிழமை திருவாதிரை தினத்தன்று ஸ்ரீமத்ராமானுஜர் அவதரித்தார். ஐந்து ஆச்சார்யர்களில் ஒரு வரானதிருமலை நம்பி, இவருக்கு இளையாழ்வார் என்று நாமமிட்டார். காஞ்சிபுரத்தில் யாதவபிரகாசரிடம் கல்விபயின்றார். ஸ்ரீராமானுஜரின் கல்விமேன்மையினால் பொறாமை கொண்டு அவரை கொல்ல நினைத்து அவரது கல்விக்கு காரணமான யாதவபிரகாசரிடம் இருந்து அவரை காஞ்சிதேவப்பெருமான் காப்பாற்றினார். பூந்தமல்லியிலிருந்து நடைபயணமாக வந்து காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீவரதராஜப்பெருமாள், பேரருளாளன், தேவராஜம் பெருமானுக்கு பூக்கட்டிக்கொண்டுவந்து, ஆலவட்டம் (விசிறி) வீசி, பெருமாளுடன் பேசுகின்றபெரும்பாக்கியம் பெற்ற திருக்கச்சிநம்பியை தனது ஆசார்யராய் ஆகவேண்டும் என்று விரும்பினார் ஸ்ரீராமானுஜர்.வைணவத்திற்கு ஜாதி ஒரு தடையில்லை, தூய்மையான மனதுடன் சரணாகதி செய்கின்ற ஒவ்வொரு ஹிந்துவும் மோக்ஷம்பெறும் அஷ்டோத்ரமந்திரமான “ஓம்நமோநாராயணாய” என்ற திருமந்திரத்தை தனது ஆசார்யரின் வார்த்தையைமீறி, தான்நரகம் சென்றாலும்பரவாயில்லை எல்லோருக்கும் மோக்ஷம்அளிக்கும் திருமந்திரத்தை கோபுரஉச்சியிலிருந்து அன்பர்களுக்கு உபதேசித்த உத்தமர் ஸ்ரீராமானுஜர். தான்மிகவும் உயர்ந்தவராககருதும் பரமபாகவதரான திருக்கச்சிநம்பி உண்ட உணவைதான் உண்ணவிரும்பி அதற்கு பங்கம் விளைவித்ததனது ஆசாரமானமனைவியை விட்டு பிரிந்து சன்னியாசம் மேற்கொண்டு, தனது தூயவாழ்க்கையை வைணவத்திற்காக அர்பணித்தார். உயர்ந்த, சரணாகதிதத்துவத்தை போதிக்கும் தத்துவமான விசிஷ்டாத்வைதத்தை நாடுமுழுவதும் பரவுவதற்காக சமஸ்கிருதநூல்களை இயற்றினார். வேதத்திற்கு ஒப்பான ஆழ்வார்கள் அருளிய தமிழ்மறை திவ்யபிரபந்தங்களை எல்லா வைணவ திருத்தலங்களில் எம்பெருமான் முன்பு கோஷ்டியாகபாடுகின்ற முறையை ஸ்ரீரங்கத்திலிருந்து ஆரம்பித்தார். தனது ஆச்சாரியருக்காக தங்களையே சமர்ப்பித்த மிகஉயர்ந்த ஆழ்வார்கள் வரிசையில் கூரத்தாழ்வார், முதலியாண்டார் என்ற இரண்டு பெருமைவாய்ந்த சிஷ்யபரம்பரை உடையவர். பிரம்மசூத்திரத்திற்கு வியாக்யானம் எழுதினபடி யால்பாஷ்யக்காரர் என்ற பெருமை பெற்றார். ஸ்ரீவைஷ்ணவசம்பிரதாயத்தை மீண்டும் உலகில் நாட்டி, விசிஷ்டாத்வைததத்துவத்தின் மூலம், சாதாரண மானிடர்களையும் உய்விக்கவழிவகைதந்த பெருமைக்குஉரியவர் ஸ்ரீராமானுஜர். வேதாந்தசங்க்ரஹ, ஸ்ரீபாஷ்யம், பகவத்கீதைபாஷ்யம், வேதாந்ததீபம், வேதாந்தகாரர், கத்யத்ரயம் (சரணாகதிகத்யம்), ஸ்ரீரங்ககத்யம், ஸ்ரீவைகுண்டகத்யம், நித்யக்ரந்தம் என்றும் பலதத்துவநூல்களை உலகுக்கு தந்தார் ஸ்ரீராமானுஜர்.
ஹிந்துதர்மத்தின் உயர்ந்த சிந்தனைகள் இன்றும் உயிரோட்டமாக இருப்பதற்கு அடித்தளம்நாட்டிய பெருந்தகைகளுல் ஒருவர் ஸ்ரீராமானுஜர். பெரிய ஒருநீரோட்டமான வைணவபரம்பரை இன்றளவும், ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து கட்டிக்காத்துவருவது ஸ்ரீராமானுஜருடைய உயர்ந்ததத்துவத்தினால் ஈர்க்கப்பட்ட பல உயர்ந்த ஆசார்யபரம்பரைகளால் மட்டுமே காரணம்.
– கட்டுரையாளர்: திரு. ராகவன்