ஹரியானாவில் 4 காலிஸ்தான் பயங்கரவாதிகள் கைது

0
157

ஹரியானாவில், 4 காலிஸ்தான் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். பாக்.,குடன் தொடர்பில் இருந்த அவர்களிடம் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.டில்லி நோக்கி சென்ற இன்னோவா சொகுசு காரை, ஹரியானாவின் கர்னல் மாவட்டத்தில் உள்ள பஸ்தாரா செக் போஸ்டில் போலீசார் சோதனை செய்தனர். அதில் இருந்த 4 காலிஸ்தான் பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களில் முக்கிய குற்றவாளியான குருப்ரீத், பாகிஸ்தானுடன் தொடர்பில் இருக்கும் மற்றொரு பயங்கரவாதியான ராஜ்பீர் என்பவருடன் தொடர்பில் இருந்துள்ளார். மற்றவர்கள் பூபேந்தர், அமன்தீப் மற்றும் பரமிந்தர் எனவும், கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பஞ்சாபில் வசித்து வந்ததும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காரை சோதனை செய்த போது ஐஇடி வெடிகுண்டுகள், பிஸ்டல்கள், புல்லட்கள், நாட்டு துப்பாக்கிகள் , மற்றும் ரூ.1.3 லட்சம் ரொக்கம் இருந்தது பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 3 பெட்டிகள் உள்ளன. அதில் ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து உள்ளதாக சந்தேகம் உள்ளது. கைதானவர்கள், பாகிஸ்தானில் உள்ள மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்விந்தர் சிங் உத்தரவுப்படி ஆயுதங்களை மஹாராஷ்டிராவின் நன்டட் மற்றும் தெலுங்கானாவின் அடிலாபாத் நகருக்கு கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. மேலும் இவர்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு உள்ளது. பறிமுதல் செய்யப்பட்டவற்றை, வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மத்திய உளவுப்பிரிவினர் அளித்த தகவல்படி இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here