ஜம்மு-காஷ்மீரில் அமா்நாத் புனித யாத்திரைக்கு பக்தா்கள் செல்லும் பாதையில் ஹிஜ்புல் முஜாகிதீன் கமாண்டா் மற்றும் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனா். அமா்நாத் புனித யாத்திரை அடுத்த மாத இறுதியில் தொடங்க இருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதில் அஸ்ரஃப் மோல்வி என்ற பயங்கரவாதி அந்த அமைப்பின் கமாண்டா் நிலையில் இருந்தவன். காஷ்மீரில் நீண்டகாலமாகத் தேடப்பட்டு வரும் பயங்கரவாதியாகவும் இருந்தன். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறை விசாரித்து வருகிறது .