200 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ தயார் நிலையில் – ராணுவ தளபதி அதிர்ச்சி

0
152

கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகு எல்லையில் போர் நிறுத்த மீறல்கள் குறைந்துள்ளன. கடந்த 13 மாதங்களில் 3 விதிமீறல்களே நடந்துள்ளன.
எல்லைக்கு அப்பால் பயங்கரவாத கட்டமைப்புகள் அப்படியே இருக்கின்றன. பெரிய அளவிலான 6 பயங்கரவாத முகாம்களும், சிறிய அளவிலான 29 பயங்கரவாத முகாம்களும் செயல்பட்டு வருகின்றன. பயங்கரவாத கட்டமைப்புகள் நீடிப்பதற்கு பாகிஸ்தான் ராணுவமே காரணம். அதன் ஒத்துழைப்பை மறுக்க முடியாது.

எல்லைக்கு அப்பால் காஷ்மீருக்குள் ஊடுருவ தயார்நிலையில் 200 பயங்கரவாதிகள் உள்ளனர். அதே சமயத்தில் ஊடுருவலை தடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

பயங்கரவாதிகள் மலைப்பகுதி மற்றும் வனப்பகுதிகள் வழியாக மட்டும் ஊடுருவுவது இல்லை. ஜம்மு, பஞ்சாப், நேபாளம் ஆகிய இடங்களில் உள்ள சர்வதேச எல்லை வழியாகவும் ஊடுருவி வருகிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு, கூடிய விரைவில் அழிப்பதுதான் எங்கள் நோக்கம். என வடக்கு பிராந்திய ராணுவ தளபதி உபேந்திரா திவிவேதி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here