தாஜ் மகாலில் 22 மூடிய அறைகள் உள்ளன என கூறப்படுகிறது. இந்து தெய்வங்களின் சிலைகள் உள்ளன என கூறப்படுகிறது. அதனால், உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்து இந்திய தொல்லியல் துறை அதனை ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட கோரி அலகாபாத் ஐகோர்ட்டு அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனுவில், சில இந்து அமைப்புகள் மற்றும் மதிப்புமிக்க புனித துறவிகள் கூறியபடி, இந்த நினைவு சின்னம் ஒரு காலத்தில் சிவன் கோவிலாக இருந்தது என தெரிவித்துள்ளனர். பல வரலாற்று ஆசிரியர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். எனினும், பல வரலாற்று ஆசிரியர்கள், முகலாய பேரரசர் ஷாஜகானால் இந்த தாஜ் மகால் எழுப்பப்பட்டது என கூறுகின்றனர்.மனுவில், 4 அடுக்கு கட்டிடத்தின் மேல் மற்றும் கீழ் புறத்தில் (தோராய அடிப்படையில் 22 அறைகள்) சில அறைகள் உள்ளன. அவை எப்போதும் மூடப்பட்டே உள்ளன. பி.என். ஓக் போன்ற பல வரலாற்றாசிரியர்கள் மற்றும் கோடிக்கணக்கான இந்து வழிபாட்டாளர்கள், இந்த பூட்டிய அறைகளில் கடவுள் சிவன் இருக்கிறார் என நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த கதவுகள் பூட்டப்பட்டு உள்ளன என இந்திய தொல்லியல் துறை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கப்பட்டு இருந்தது என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Home Breaking News இந்து கடவுள் சிலைகள் தாஜ்மகாலின் மூடிய கதவுகளுக்கு பின்னால் உள்ளன; ஐகோர்ட்டில் மனு தாக்கல்