உத்தரகண்ட் மாநிலம் இமயமலை தொடரில் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்கள் அமைந்துள்ளன. இந்த நான்கு தலங்களுக்கும் செல்வது சார்தாம் யாத்திரை என அழைக்கப்படுகிறது.கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி, கேதார்நாத் கோவில்கள் சமீபத்தில் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, பத்ரிநாத் கோவில் அதிகாலை 6:15 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க திறக்கப்பட்டது. முதல் நாளிலேயே ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்காக குவிந்தனர். நான்கு தலங்களும் திறக்கப்பட்டதையடுத்து, சார்தாம் யாத்திரை துவங்கியது.