குஜராத்தில் உள்ள பழமையான சோம்நாத் கோவிலில் “பான் ஸ்தம்ப்” என்று ஒரு கண்கவர் மர்மம் உள்ளது.
கோயிலின் தெற்குப் பகுதியில், கடலைப் பார்க்கும் வகையில், “பான் ஸ்தம்ப்” என்ற தூண் உள்ளது. கடல் நோக்கிச் செல்லும் தூணின் உச்சியில் ஒரு அம்பு கட்டப்பட்டுள்ளது. இந்த தூணின் இருப்பு 6 ஆம் நூற்றாண்டிலிருந்து சில பண்டைய புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தூணில் சமஸ்கிருதத்தில் ஒரு கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது –
“ஆசமுத்ராந்த தக்ஷிண த்ருவ்,பர்யந்த் அபாதித் ஜோர்திமார்க்”.
(“கடலின் இந்த புள்ளியிலிருந்து தென் துருவம் வரை பூமியில் நிலப்பரப்பு இல்லை).
ஆச்சரியமான உண்மை என்னவென்றால் நீங்கள் சோம்நாத் மந்திரில் இருந்து தெற்கு நோக்கி பயணிக்கத் தொடங்கினால், 10,000 கிமீ தொலைவில் உள்ள தென் துருவத்தை (அண்டார்டிகா) அடையும் வரை நீங்கள் எந்த மலையையும் அல்லது நிலத்தையும் காண முடியாது.
இதில் புல்லரிக்க வைக்கக் கூடிய உண்மை என்னவென்றால் – 6 ஆம் நூற்றாண்டில் நம் முன்னோர்களுக்கு இந்த உண்மை எப்படி தெரியும்?
பூமியின் வான்வழி வரைபடம் அவர்களிடம் இருந்ததா? வானியல், புவியியல், கணிதம் மற்றும் கடல்சார் அறிவியல் ஆகியவற்றில் அவர்களுக்கு எந்த அளவு நுண்ணறிவு இருந்திருக்க வேண்டும்! என்பதெல்லாம் விடை அறிய இயலாத கேள்விகள்…
நமது பண்டைய இந்திய பாரம்பரியம் உண்மையில் ஒரு அற்புதம்!