ஜே-கேயில் பாதுகாப்புப் படையினர், விஐபிகள் மீது தாக்குதல் நடத்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி திட்டமிட்டுள்ளார்

0
276

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஃபியாபாத் மற்றும் சோபூர் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் மற்றும் விஐபிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதற்காக ஹந்த்வாராவை சேர்ந்த ரிஸ்வான் ஷாபி லோன் என்ற லஷ்கர் தீவிரவாதி திட்டம்- இந்திய இராணுவம்

ரஃபியாபாத் (ஜம்மு மற்றும் காஷ்மீர்) [இந்தியா]: May 14 ஜம்மு காஷ்மீரின் ரஃபியாபாத் மற்றும் சோபூர் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மற்றும் விஐபிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதி ஒருவரை இந்திய ராணுவம் கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஹந்த்வாராவை சேர்ந்த ரிஸ்வான் ஷஃபி லோன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

“குறிப்பிட்ட தகவலின் பேரில், ரஃபியாபாத் ராணுவம் மற்றும் ரஃபியாபாத் போலீசார் இணைந்து ரோஹாமா ரஃபியாபாத்தில் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு, ஒரு பயங்கரவாதியை கைது செய்து, அவனிடம் இருந்து வெடிமருந்துகளுடன் ஒரு துப்பாக்கியையும் மீட்டனர்” என்று ராணுவத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.

“பிடிபட்ட பயங்கரவாதி லஷ்கர்-இ-தொய்பா (LeT) என்ற பயங்கரவாத அமைப்பில் பணிபுரிந்து வந்தார் என்பதும், ரஃபியாபாத் மற்றும் சோபூர் பகுதியில் உள்ள பாதுகாப்புப் படையினர் மற்றும் விஐபிகளை தாக்கி கொல்ல திட்டமிட்டு பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லோன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்கள்  வரவிருக்கின்றன. (ANI)

                                                                                                         தமிழில்: சகி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here