ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம், மக்களின் வாழ்வில் புரட்சிகரமான நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘இந்த இயக்கம் சுகாதாரத்துறையை மாற்றியமைத்துள்ளது. ஒருங்கிணைந்த டிஜிட்டல் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவதில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் முக்கிய பங்காற்றுகிறது. சுகாதார சேவைகளில் உள்ள இடைவெளிகளை குறைப்பதில் இது ஒரு பாலமாக அமைந்துள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.