யூனின் முன்னோடியான மூன் ஜே-இன் தனது நாட்டின் முக்கிய பாதுகாப்பு உத்திரவாதமான அமெரிக்காவிற்கும் அதன் பொருளாதார பங்காளியான சீனாவிற்கும் இடையிலான உறவுகளை சமநிலைப்படுத்த முயன்றார். யூன் அதிபராக இருக்கும் போது தென் கொரியா-சீனா உறவுகள் மோசமடையலாம்.
தென் கொரியாவின் சின்னமான ப்ளூ ஹவுஸில் புதிய குடிவந்திருப்பவர் – யூன் சுக்-யோல், நாட்டின் 20 வது ஜனாதிபதி. இது பெய்ஜிங்குடனான சியோலின் உறவுகளில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா?
1980களில் சீனாவும் தென் கொரியாவும் தங்களுக்கு இடையே இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர். அப்போதிருந்து, அவர்கள் பல துறைகளில் தங்கள் உறவுகளை அதிகரித்து வந்துள்ளனர். யூனின் முன்னோடியான மூன் ஜே-இன் தனது நாட்டின் முக்கிய பாதுகாப்பு உத்திரவாதமான அமெரிக்காவிற்கும் அதன் பொருளாதார பங்காளியான சீனாவிற்கும் இடையிலான உறவுகளை சமநிலைப்படுத்த முயன்றார். யூன் அதிபராக இருக்கும் போது தென் கொரியா-சீனா உறவுகள் மோசமடையலாம்.
உலகத் தலைமைக்கு சீனாவை அதன் சவாலாகக் கருதும் அமெரிக்காவுடன் நெருக்கமாக செல்ல யூன் தயாராகிவிட்டார். அவரது ஜனாதிபதி பிரச்சாரத்தில், வாஷிங்டனுடனான சியோலின் அனைத்து முக்கிய உறவைக் குறைத்து மதிப்பிட்டதற்கு மூனை விமர்சித்தார்.
சியோலில் புதிய தலைவர் யூனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள சீன துணைத் தலைவரும் கம்யூனிஸ்ட் நாட்டின் அதிபதியான ஜி ஜின்பிங்கின் நெருங்கிய கூட்டாளியுமான வாங் கிஷானை பெய்ஜிங் அனுப்பியது. யூன் தனது தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளைப் பின்பற்றுவதையும், சீனாவிற்கு எதிராக ஒரு கடினமான நிலைப்பாட்டை எடுப்பதையும் தடுக்கபெய்ஜிங் நோக்கமாகக் கொண்டிருக்கலாம்.
ஆனால் அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை. வட கொரியாவில் இருந்து வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள டெர்மினல் ஹை ஆல்டிடியூட் ஏரியா டிஃபென்ஸ் (தாட்) எனப்படும் அமெரிக்க பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை நிலைநிறுத்துவதற்கான தனது விருப்பத்தை சியோல் அறிவித்த பிறகு, சீனா மற்றும் தென் கொரியா இடையேயான உறவுகள் 2017 இல் மோசமான நிலையை அடைந்தது. இதை ஆட்சேபித்த பெய்ஜிங், சீனாவின் இராணுவத் திறனைக் குறைக்கப் பயன்படலாம் என்று கூறியது. தாட் விவகாரத்தில் யூன் கடுமையாக இருக்க வாய்ப்புள்ளது. அவர் தனது ஜனாதிபதி பிரச்சாரத்தில், இந்த முறையை விரிவுபடுத்துவதை சுட்டிக்காட்டினார்.
தவிர, யூன் டோக்கியோவுடனான சியோலின் உறவுகளை சரிசெய்ய முனைகிறார் – இந்த நடவடிக்கை பெய்ஜிங்கிற்கு பிடிக்காது. குறிப்பாக இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களுக்காக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட கொரியர்களின் இழப்பீட்டுக் கோரிக்கைகளை தென் கொரிய நீதிமன்றங்கள் கேட்கத் தொடங்கியதில் இருந்து, சியோல்-டோக்கியோ உறவுகள் இறுக்கமடைந்துள்ளன. 1965 ஆம் ஆண்டில் 300 மில்லியன் டாலர்களை ஒருமுறை செலுத்துவதன் மூலம் பிரச்சினை முழுமையாக தீர்க்கப்பட்டதாக ஜப்பான் கூறுகிறது.
சியோலுக்கும் டோக்கியோவுக்கும் இடையிலான உறவுகள் சிறப்பாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள். மே 10 அன்று, ஆக்ஸ்போர்டில் படித்த ஜப்பானிய வெளியுறவு மந்திரி ஹயாஷி யோஷிமாசா யூனின் ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். அவரது சியோல் பயணத்தின் போது, அவர் தனது பிரதம மந்திரி கிஷிடா ஃபுமியோவிடமிருந்து தனிப்பட்ட கடிதத்தை வழங்கினார். ஜப்பானும் தென் கொரியாவும் தங்கள் உறவுகளை “மேம்படுத்துவதில்” நேரத்தை வீணடிக்க விரும்பல்லை என்று அந்தக் கடிதம் வலியுறுத்தியதாக நம்பப்படுகிறது.
மேலும், யூன் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் தீவிர ஆதரவாளர் ஆவார், இது கம்யூனிச சீனாவின் விருப்பத்திற்கு எதிராகவே உள்ளது. தென் கொரியா இன்று உலகின் 10 வது இடத்தில் ஒரு பெரிய பொருளாதார சக்தியாக உள்ளது. இது நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும் K-pop மூலம் உலகை வழிநடத்துகிறது. யூன், தனது நாட்டின்இந்த செழுமை சுதந்திர சூழ்நிலைக்கு நிறைய கடன்பட்டிருக்கிறது என்பதை முழுமையாக அறிந்திருப்பதாக தெரிகிறது.
தனது தொடக்க உரையில், ஜனாதிபதி யூன் தனது மக்களை “உலகளாவிய குடிமக்களாக” சிந்திக்கவும், “நமது சுதந்திரத்தை பறிக்கும், மனித உரிமைகளை துஷ்பிரயோகம் செய்யும் அல்லது அமைதியை அழிக்கும்” எந்த முயற்சிக்கும் எதிராக “நிற்க” வலியுறுத்தினார்.
தமிழில்: சகி