ராணுவ தளவாடம், ஆயுதங்களுக்கான உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு தடை

0
101

தற்சார்பு நிலையை எட்டும் வகையிலும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையிலும், ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்து வருகிறது. இதன்படி, இதுவரை மூன்று முறை இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது நான்காவது பட்டியலை ராணுவ அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. இதில், ராணுவ ஆயுதங்கள், தளவாடங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் உட்பட, 928 பொருட்கள் இடம்பெற்றுள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுக்குள் படிப்படியாக இது அமல்படுத்தப்படும். ஏற்கனவே, 2,500க்கும் மேற்பட்ட பொருட்கள், ஆயுதங்கள் இறக்குமதி நிறுத்தப்பட்டு, உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. இதைத் தவிர, தடை பட்டியலில், 1,238 பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில், 310 பொருட்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருவதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: ராணுவத் துறையில் உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்கவும், தற்சார்பு நிலையை எட்டவும், பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே இது போன்ற மூன்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது நான்காவது முறையாக, 928 உதிரி பாகங்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here