ஸ்வஸ்திக் ஆஸ்திரேலியா அங்கீகரிப்பு

0
480

பல நாடுகளைபோல ஆஸ்திரேலியாவும் ‘ஹக்கென்க்ரூஸ்’ என அழைக்கப்படும் நாஜி சின்னத்தை தடை செய்துள்ளது. இதனால், சற்று அதேபோல உள்ள காரணத்தால் ஹிந்து மதத்தின் புனிதச் சின்னங்களுல் ஒன்றான ஸ்வஸ்திக் சின்னத்தையும் தடை செய்தது. ஆஸ்திரேலியாவில் உள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, ஹிந்து அமைப்புகள், கோயில்கள் மற்றும் சங்கங்கள் மன்றம் போன்றவை ஸ்வஸ்திக் சின்னம் நாஜி சின்னம் அல்ல, அது ஹிந்து மதத்தின் புனிதச் சின்னம் என வலியுறுத்தி பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தின. ஆறாயிரம் வருடங்களுக்கு முன்பே அவை குகை ஓவியங்களாக இருந்தது, வேதகாலத்தில் இருந்தே அதன் பயன்பாடு, ஹிந்து, பௌத்த, ஜைன சமூகங்களில் ஸ்வஸ்திக் பயன்பாடு ஆகியவை ஆதாரங்களுடன் எடுத்துரைக்கப்பட்டன. இதன் விளைவாக, தற்போது ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம், ஹிந்துக்களின் ஸ்வஸ்திக் சின்னத்தின் கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை அங்கீகரித்துள்ளது. விக்டோரிய மாகாணத்தின் அட்டர்னி ஜெனரல் ஜாக்லின் சைம்ஸ், நாஜி ஹக்கென்க்ரூஸ் சின்னத்தையும் ஹிந்துக்களின் ஸ்வஸ்திகா சின்னத்தையும் வேறுபடுத்தி, மத மற்றும் கலாச்சார ஸ்வஸ்திக்கின் தோற்றம், அதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக கல்வி பிரச்சாரத்தை அனுமதிக்கும் சட்டம் அடுத்த வருடம் நடைமுறைக்கு வரும் என்று கூறியுள்ளார். இது ஆஸ்திரேலிய ஹிந்து அமைப்புகளுக்கு குறிப்பிடத்தக்க வெற்றியாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here