பா.ஜ.க. ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் பகவத்கீதை போதிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டம் அம்மாநிலம் உட்பட பல மாநிலங்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. பகவத் கீதை போன்ற வேதங்கள் பள்ளிகளில் போதித்து வந்தால், அதை கற்கும் குழந்தைகள் ஒழுக்கமுடனும், தெளிவான சிந்தனையுடனும் இருப்பார்கள். ஆனால் தமிழக்த்திலோ திராவிட சிந்தாந்தத்தை திணிக்க தி.மு.க. முயற்சி செய்து வருகிறது. உதாரணத்திற்கு தமிழுக்கும், பெண்கள் முன்னேற்றத்திற்கும்,ஜாதி ஒழிப்பிற்க்கும் ஈ.வே.ராமசாமி நாயக்கர் தான் காரணம் என்றும், யுனேஸ்கோ ஈ.வே.ராவிற்கு விருது வழங்கியுள்ளதாகவும் பொய்த் தகவல்களை பாடப்புத்தகத்தில் இடம் பெற வைக்க முயல்கிறது. சில வகுப்பு புத்தகங்களில் இவை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படியாக மாணவர்களை கல்வி ரீதியாக மூளைசலவை செய்ய தி.மு.க. அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக மாணவர்களின் எதிர்கால கல்வி முறையின் நிலை கேள்விக்குறியாக இருக்கிறது. உத்தரகாண்ட் மாநிலம் போல தமிழகத்திலும் பகவத் கீதையை பள்ளிகளில் போதிக்கும் திட்டம் கொண்டுவர வேண்டும் என்றும், மேலும் உண்மையான சுதந்திர போராட்டகாரர்களின் உண்மையாக வரலாறுகளை பள்ளி பாடப்புத்தகங்களில் இடம்பெற செய்ய வேண்டும் என்று தமிழக அரசிடம், இந்து முன்னணி வலியுறுத்தி வருகிறது.