ஞானவாபி குறித்து விவாதிக்கப்படும்

0
234

ஜூன் 10 மற்றும் 11 தேதிகளில் ஹரித்வாரில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு குறித்து தகவல் அளித்த வி.ஹெச்.பி அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் இந்த கூட்டம் நடைபெறும். விஷ்வ ஹிந்து பரிஷத் ஒரு மைய வழிகாட்டி குழுவைக் கொண்டுள்ளது, மேலும் நாட்டின் பல துறவிகள் அதன் உறுப்பினர்களாக உள்ளனர். விஷ்வ ஹிந்து பரிஷத்தின் இந்தக் கூட்டம் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் நாடு முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான துறவிகள் கூடி நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விவாதிப்பார்கள். நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நம் அனைவருக்கும் வழிகாட்டுமாறு துறவிகளை நாங்கள் கேட்டுக்கொள்வோம். வாரணாசியில் தற்போது நடப்பது இயல்பாகவே முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. இதை அனைத்து மகான்கள் முன்னிலையிலும் விளக்குவோம். பொதுவாக ஞானவாபி மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பை துறவிகளும் வி.ஹெச்.பியும் மதித்து செயல்படும். எங்கள் சமூகமும் நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக நம்பும். நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்காக நாங்கள் காத்திருப்போம். அதன் பிறகு எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்’ என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here