கர்நாடகாவில், கட்டாய மதமாற்றத் தடுப்பு அவசர சட்டம் கொண்டு வர கர்நாடக அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியது. இந்த புதிய சட்ட வரைவுக்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது. இந்த சூழலில், குடகு மாவட்டம், மன்சல்லியில் மதமாற்றம் நடப்பதாக பஜ்ரங்தள் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் ஒரு குடும்பத்தினரை மதமாற்றம் செய்ய முயற்சித்த கேரளாவை சேர்ந்த குரியச்சன் மற்றும் அவரது மனைவி சலினாமா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கர்நாடகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமலுக்கு வந்த மறுநாளே, மதமாற்றத்தில் ஈடுபட்ட கேரள தம்பதிகள் மீது முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.