சிறப்பாக செயல்படும் பாரதம்

0
191

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன், ஐ.எஸ்.ஐ.எஸ் அல்கொய்தா, ஜமாத் அல் முஜாகிதீன், உள்ளிட்ட பல பயங்கரவாத அமைப்புகள் பாரதத்தில் செயல்படுகின்றன. காஷ்மீரில் மட்டும் 153 பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன. எனினும், பாரத பாதுகாப்பு படையினரின் அதிதீவிர நடவடிக்கைகளால் காஷ்மீரில் ஓராண்டில் மட்டும் 193 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில், பாதுகாப்பு படைகளை சேர்ந்த 45 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். பொதுமக்களில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மணிப்பூரில் கடந்த நவம்பர் 1ம் தேதி மக்கள் விடுதலைப் படை என்ற இடதுசாரி பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த சூழலில், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் பாரதம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பயங்கரவாதிகளின் சதித் திட்டங்களை முன்கூட்டியே கண்டறிவது, அவர்களது தாக்குதல்களை தடுப்பது, பயங்கரவாதிகளையும் அவர்களது அமைப்புகளையும் அழிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை பாரதம் மிகச் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் பாரத அரசு புதிய உத்திகளை கையாண்டு வருகிறது. இதன்படி ஜம்மு காஷ்மீரில் ராணுவம் சார்பில் பள்ளிகள், மருத்துவ முகாம்கள், வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. மருத்துவ முகாம்கள், வேலைவாய்ப்பு முகாம்கள் போன்றவை நடத்தப்படுகின்றன. உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பாரதத்த்ன் கடல் எல்லை மிகவும் நீளமானது. அதனை பாதுகாக்க பாரத அரசு கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here