மதுராவில் கிருஷ்ண லீலா

0
527

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராம் லீலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதேபோல மதுராவில் கிருஷ்ண லீலா நிகழ்ச்சியை நடத்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இந்த முயற்சிக்கு உலகெங்கிலும் உள்ள கிருஷ்ண பக்தர்கள் தங்களுடைய நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நடவடிக்கை பக்தியை பரப்புவது மட்டுமில்லாமல் இப்பகுதியின் சுற்றுலா, வேலைவாய்ப்பு, தொழிற்துறைகளையும் மேம்படுத்தும். மேலும், மதுராவில் உள்ள பிரஜ் பகுதியில் பிறந்த கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் வீடுகளை பாதுகாக்கவும், அந்த பகுதியில் உள்ள சாலைகளுக்கு அவர்களின் பெயர் சூட்டவும், பிரஜ் மொழியில் உள்ள இலக்கியங்கள் ஜெர்மன், பிரெஞ்சு, ரஷ்ய மொழிகளில் மொழிபெயர்க்கவும் யோகி அரசு முடிவு செய்துள்ளதாக டைனிக் பாஸ்கர் பத்திரிகை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here